ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கையின் ஈட்டி எறிதல் செம்பியன் ருமேஷ் தரங்கவிற்காக ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய ஈட்டி, ஜப்பானில் வைத்து அவரிடம் முறைப்படி கையளிக்கப்பட்டது.
விளையாட்டு அமைச்சினால் இந்த ஈட்டி அவருக்காக இறக்குமதி செய்யப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
