தலவத்துகொட சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையினரின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
