செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து ஒரு லிற்றர் டீசலுக்கு 80 முதல் 100 ரூபா வரை மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விற்பனை மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த தரவுகள் கோரப்பட்டுள்ளன. அந்தத் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே துல்லியமான மானியத்தொகை தீர்மானிக்கப்படும்.South Asians & Diaspora
இந்த மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய விலைகளைத் தக்கவைப்பதிலும் டீசல் விலையை உயர்த்துவதைத் தவிர்ப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலையானது அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய்க்கு சுமார் 92.41 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் 104.03 அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
