Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனி சிலையை தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரன் குற்றச்சாட்டு

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனி சிலையை அகற்றிய இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் தமிழரசு கட்சியும் அனுரா அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

நல்லூர் திலீபன் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை நேற்று சனிக்கிழமை (26) இரவு பொலிசார் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளர் எஸ்.கஜேந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 18ம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்காக நல்லூரில் உள்ள திலீபன் நினைவேந்தல் பூங்காவில் ஒலி பெருக்கிக்கான அனுமதியை பெற யாழ் மாநகரசபை மேயரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் கட்சி தலைமை தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நான் சி.கே. சிவஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் என்னிடம் மிக காட்டமாக கேட்டார் நீங்கள் யாரை கேட்டு இந்த சிலை வைக்கின்றீர்கள், 26 ம் திகதியோடு இந்த சிலை அகற்றப்படவில்லை என்றால் நான் இந்த சிலையை எடுப்பேன் என என்னிடம் தெரிவித்தார்.

நான் எதிர்பாக்கவில்லை இவர் இவ்வளவு கீழ்த்தரமாக செய்வார் என்று எனவே இவர் நிச்சயமாக பொலிசாரை ஏவி பொலிசாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டிருக்கின்றது என்பதுடன், தமிழரசு கட்சியும் அனுர அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்கு பின்னால் சி.வி.கே.சிவஞானம் இருக்கின்றார் என்ற வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம். அத்துடன் இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

வைகாசி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் விலை சரிவு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: ஒரு கைதி உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube