முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய , ஊழல் குற்றச்சாட்டின்கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய தினம் (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயிலினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
