யேமன் நாட்டின் தாயிஸ் (Taiz) மாகாணத்தின் மாவியா (Mawiya) பகுதியில் அமைந்துள்ள சந்தையொன்றில் உள்ள சில கடைகளைக் இலக்கு வைத்து நேற்று (27) நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக ஹூதி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், குறித்த சந்தைக்கு அருகில் அமைந்திருந்த ஹூதி அமைப்பின் இராணுவ முகாம் மற்றும் சில இராணுவ வாகனங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யேமனின் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் பின்னர் அறிவித்துள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் அண்மைக்காலமாகவே குறித்த சந்தைக்கு அருகில் இராணுவ முகாமொன்றை அமைத்திருந்ததாக யேமன் அரசாங்கத்தின் இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
