Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள ஏழு வீதிகளில் 104 புதிய பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன்,மக்களுக்கு மேலும் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான ஒரு முயற்சியாக,மேல் மாகாணத்தில் உள்ள ஏழு வீதிகளில் 104 புதிய பேருந்துகளை இன்று (29) முதல் சேவையில் ஈடுபடுத்த மெட்ரோ பஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய பேருந்துகளை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.யு.பி. திலகரத்ன, இந்த ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொழும்பை மையமாகக் கொண்ட ஏழு வீதிகளில் இந்தப் புதிய பேருந்துகள் இயங்கவுள்ளதுடன், பயணிகள் திட்டமிடப்பட்ட வீதிகள் மற்றும் நேர அட்டவணைகளின்படி தங்களது இலக்குகளைச் சென்றடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இச்சேவைகள் அமைந்துள்ளன.

குறிப்பாக ஒரேயொரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் கொழும்புக்குள் நுழைவதைக் குறைப்பதே இந்தப் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.கொழும்புக்கு வரும் வாகனப் போக்குவரத்தைக் குறைப்பதே எங்களது முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

தற்போது பலர் தங்களது அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனியார் வாகனங்களையே பயன்படுத்துவதாகவும், அவற்றில் பெரும்பாலும் ஒரு நபர் மட்டுமே பயணிப்பதாகவும்,இதனால் தினசரி பயணங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்களது நம்பிக்கையாகும்.பொதுமக்கள் தங்களது தினசரி பயணங்களுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, கொழும்பில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண உதவும் என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் கடற்படை அறிவிப்பு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூடப்பட்ட ரயில் நிலையங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழப்பு!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube