Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கின் ஒன்றுகூடல் திகதி அறிவிப்பு

புரட்டாதி 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக,  பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஒன்றுகூடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கபுலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் 2 ஆவது பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள டெய்சி ஃபொரஸ்ட் மன்றில் முன்னிலையாகாத நிலையில், பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது தனது சேவைப்பெறுநர் சுகயீனமுற்றிருப்பதாக நீதிமன்றத்துக்கு அறிவித்த சட்டத்தரணி, அதற்குரிய மருத்துவ அறிக்கையினையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

தொடர்ந்து சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஓஸ்வால்ட் பெரேரா விடயங்களை முன்வைக்கையில், “முதலாவது பிரதிவாதி, வழக்குத் தொடுனருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை மீளப்பெற்றுள்ளார்.

ஆகையால் இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான திகதியை நிர்ணயிக்குமாறு” மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்புச் சாட்சியங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்குக்கு முன்னரான ஒன்றுகூடல் மற்றும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என திகதி குறித்தார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2013 டிசம்பர் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஈட்டப்பட்ட விதம் குறித்து உறுதிப்படுத்த முடியாத சுமார் 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை 3 தனியார் வங்கிக் கணக்குகளில் நிரந்தர வைப்பிலிட்டமையால், பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகப் பிரதிவாதிகளுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டிப்பளையில் முச்சக்கரவண்டி – மோட்டார்சைக்கிள் விபத்து

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 கிலோ பவளப்பாறை மற்றும் புலிப்பல்லுடன் இருவர் கைது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி துப்பாக்கி சூட்டுச் சந்தேக நபர் கைது!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube