Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்ய 2 கோடி ரூபாவை செலவுசெய்த விவசாயி

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அதிர்ஷ்டத்தை நம்பி லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்து வரும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த 80 வயது விவசாயி ஒருவர், கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2 கோடி இந்திய ரூபாய் வரை லொத்தர் சீட்டுகளுக்காக செலவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின், கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.பி. ராகவன் (80) என்பவரே இவ்வாறு லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1967ஆம் ஆண்டு முதல் லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்து வந்தபோதிலும், அவருக்கு திருப்திகரமான பரிசுகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் ஆறுதல் பரிசுத் தொகைகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஒருநாள் கோடிகளில் அதிர்ஷ்டம் கிடைத்து தனது வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்வதற்காக விவசாய நிலம் மற்றும் மனைவியின் நகைகள் உள்ளிட்டவற்றை இழந்ததாகவும், இதனால் கடன் சுமைக்கு ஆளானதாகவும் ராகவன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இதுவரை தான் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டுகளில் பலவற்றை அவர் தனது வீட்டில் பாதுகாத்து வைத்துள்ளதாகவும், அவை ஐந்து மூடைகள் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லொத்தர் சீட்டின் மீதான தனது ஆர்வத்தை ராகவன் இதுவரை கைவிடவில்லை எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உலக ரோபோ மாநாடு – ரோபோக்களின் உலகம்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலீஸ் உத்தியோகஸ்தர் கைது !

வைகாசி 24, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் நாமல்

புரட்டாதி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube