Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுடனான போரில் அமெரிக்கா விரைவில் வெற்றிபெறும் – ட்ரம்ப்

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஈரானுடனான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவர கட்டார் உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை (28) மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இப்போரில் அமெரிக்கா “மிக விரைவில்” வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே ட்ரம்ப் இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

“நாங்கள் வெற்றி பெறப்போகிறோம். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு வழியில் அல்லது வேறு வழியில் சாத்தியமாகும். இப்போரின் முடிவு மிகவும் விரைவாக எட்டப்படும்” என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா இப்போரில் வெற்றி பெற்றவுடன், தற்போதைய பதற்றத்தால் உயர்ந்துள்ள எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலைகள் அதிரடியாகக் கீழ்நோக்கிச் சரிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கட்டார் மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக ஈரான் அனுப்பிய புதிய முன்மொழிவுகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் இடையே திங்கட்கிழமை ஆலோசனைகள் நடைபெற்றதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினாலும், பேச்சுவார்த்தையின் உள் விபரங்களைப் பகிர மறுத்துவிட்டார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இராஜதந்திர தீர்வுகளுக்குத் தயார் எனக் கூறியபோதிலும், அமெரிக்கா தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதை ட்ரம்பின் இந்த அறிக்கை உணர்த்துகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த புகையிரதம் – பயணிகள் வேறு புகையிரத்துக்கு மாற்றிவிடப்பட்டனர்.

ஆடி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மெக்சிகோவில் 7.4 7.4 மெக்னிடியூட் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 18, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பால் காலமானார்

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்:இறுதி எச்சரிக்கை

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube