கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த உணவகத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வெளியிடப்பட்ட 2492/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 96ஆம் இலக்க கட்டளையின்படி, 500 முதல் 999 மில்லிலீற்றர் வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த உணவகத்தில் 500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையான 80 ரூபாயை விட 20 ரூபாய் அதிகமாக, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்களை, உணவகங்கள் அல்லது வேறு எந்தவொரு வர்த்தக நிலையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
