Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் – இலங்கை ரக்பி அணியை பின்தள்ளிய சீனா!

#ஆசியவிளையாட்டுபோட்டிகள் #இலங்கைரக்பி #சீனா #ரக்பி #இலங்கை #விளையாட்டு #ஆசியவிளையாட்டு #SportsNews #SriLankaRugby #China

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில், ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியில் குழு சாம்பியனாகி காலிறுதிக்கு முன்னேறிய இலங்கையின் பயணம் சீனாவிடம் முடிவுக்கு வந்தது. முக்கியமான இந்தப் போட்டியில் சீனாவிடம் இலங்கை 19-17 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.

போட்டியின் முதல் பாதியின் தொடக்கத்தில், இலங்கையின் தற்காப்பு இடைவெளிகளைப் பயன்படுத்தி சீனா இரண்டு ட்ரைகளைப் பதிவு செய்ததுடன், அவற்றுக்கான கன்வெர்ஷன்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன் மூலம் சீனா 14-0 என முன்னிலை பெற்றது.

முதல் பாதி முடிவடையும் தருணத்தில் இலங்கை ஒரு ட்ரையைப் பதிவு செய்தது. எனினும், அதற்கான எளிதான கன்வெர்ஷன் வாய்ப்பு தவறவிடப்பட்டது. இதனால் முதல் பாதி முடிவில் சீனா 14-5 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இலங்கை சிறப்பாக விளையாடி போட்டிக்குள் மீண்டும் வந்தது. எனினும், முதல் பாதியில் சீனா பெற்ற முன்னிலை இலங்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இலங்கை மேலும் ஒரு ட்ரையையும் அதற்கான சற்று கடினமான கன்வெர்ஷனையும் வெற்றிகரமாகப் பெற்றது.

அதேவேளை சீனாவும் மற்றொரு ட்ரையைப் பதிவு செய்ததால், இறுதியில் 19-17 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய ஏழு பேர் ரக்பி போட்டியில் 5ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை நாளை (03) பிலிப்பைன்ஸை எதிர்கொள்ள உள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இருதரப்பு சந்திப்பு

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் கத்திக்குத்து

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் அமைப்புகள் இடம்பெற்றுள்ளது

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றவியல் வழக்குள்ள அர்ச்சுனாவிற்கு எவ்வாறு துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது ?

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube