Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு நாமல் கடிதம்

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக,தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில், “திறன்மிக்க தொழிலாளர் வளம் – கண்ணியமான தொழில் வாழ்க்கை” என்ற அத்தியாயத்தின் கீழ், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கொள்கை ரீதியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, ஆசிரியர் சேவையில் 20,000 பேருக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் STEM பட்டதாரிகள் 3,000 பேருக்கும், Non-STEM பட்டதாரிகள் 9,000 பேருக்கும், வருமான வரி, சுங்கம், வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத்துறைகளில் 3,000 பேருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக குறித்த கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் வகையில், தற்போது வேலையின்றி உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை எதிர்வரும் பாதீட்டில் மேற்கொள்ளுமாறும் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

மேலும், இந்த வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை தெளிவான காலக்கெடுவுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் பின்னர் உயிருடன் வீட்டுக்கு திரும்பிய விசித்திரம்

செப்டம்பர் 19, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

முதலாவது டி20 போட்டி: சிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

அக்டோபர் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக் கட்டணம் குறித்து விசேட அறிவிப்பு

ஏப்ரல் 29, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்க வலியுறுத்தி தீக்குளித்த தவெக தொண்டர் உயிரிழப்பு

மே 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube