Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலாவது டி20 போட்டி: சிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

அக்டோபர் 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இந்தியா மற்றும் சிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி, இந்தியாவின் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் ஒக்டோபர் 16ஆம் திகதி நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

114 ஓட்டங்களைப் பெற்ற ஜிம்பாப்வே

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது.

அணியின் சார்பில் கெலிஸ் என்ட்லோவு 44 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார். ஷார்னே மேயர்ஸ் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நந்தனி சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்ரீ சரணி, அருந்ததி ரெட்டி மற்றும் கிராந்தி கௌத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி

115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பம் சாதகமாக அமையவில்லை.

அணித்தலைவி ஸ்மிருதி மந்தனா 9 ஓட்டங்களுடனும், ஷஃபாலி வர்மா 4 ஓட்டங்களுடனும், அனுஷ்கா சர்மா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஹர்மன்பிரீத் கௌரும் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் நெருக்கடிக்கு உள்ளானது.

தீப்தி சர்மா – நிகி பிரசாத் ஜோடி அபாரம்

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய தீப்தி சர்மா பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிகி பிரசாத் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார். இருவரும் இணைந்து முக்கியமான இணைப்பாட்டத்தை உருவாக்கி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்திய அணி 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தது.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தீப்தி சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றி, இந்திய அணியின் புதிய முழுநேர டி20 அணித்தலைவியாக ஸ்மிருதி மந்தனா பொறுப்பேற்ற பின்னர் கிடைத்த முதல் வெற்றியாகவும் அமைந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: இரசாயன அறிக்கைக்குப் பின்னரே இறுதி முடிவு – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்!

ஜூலை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

செப்டம்பர் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு

ஆகஸ்ட் 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தடைசெய்ய வியட்நாம் முன்மொழிவு

ஜூலை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube