தற்போதைய எரிபொருள் விலைகளை ஒக்டோபர் மாத இறுதி வரை தொடர முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண, நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், தற்போதைய நிலையில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் ஏற்படுவதற்கு தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தமது விநியோகத்தை குறைத்துள்ளமை காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய நிலைமை ஏற்படக்கூடிய சுமார் 62 பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளுக்கு மேலதிகமாக எரிபொருள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் CPC தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற பதற்றத்துடன் நீண்ட வரிசைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும், தனியார் நிறுவனங்களின் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அருகிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிலையங்களைப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
