2026/27 மகா பருவத்தில் நெல் மற்றும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட வயல் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 30,000 ரூபாய் வீதம் உர மானியம் வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேயர் வரையான நிலப்பரப்புக்கு இந்த நிதி உதவியைப் பெறுவதற்கு விவசாயிகள் தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026/27 மகா பருவத்திற்கான இந்த உர மானியத் திட்டத்திற்காக சுமார் 16 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல் சாகுபடிக்கு மேலதிகமாக, உரிய பருவகால கலந்துரையாடல்களின் அடிப்படையில் விவசாயப் பணிப்பாளர் நாயகத்தால் பரிந்துரைக்கப்படும் ஏனைய பயிர்களுக்கும் இந்த மானியத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
