கலகொடஅத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவரது காவி உடைகளைக் நீக்கப்பட்டு சிறைச்சாலை சீருடை அணிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) காலை 9.00 மணிக்குக் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதி வழிப் போராட்டமொன்றுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக்காலத்தைச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, நேற்று (06) செவ்வாய்க்கிழமை அவர் கைதிகளுக்கான சீருடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை பெருமசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்துப் கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன, ” கடுங்காவல் தண்டனைவிதிக்கப்படும் கைதிகள் சிறைச்சாலையால் வழங்கப்படும் சீருடையையே அணிய வேண்டும் என்பது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கட்டாய விதியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறையிலுள்ள தேரர்கள்தொடர்பான விதிமுறைகள் மற்றும் கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய ஆடை நடைமுறைகளே துல்லியமாகப் பின்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு நிலுவைப் பிடியாணைத் தொடர்பில் ஞானசார தேரர் இன்றைய தினமும் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
