ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் ஆலிவ் அறுவடையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்றபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலிவ் அறுவடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பாலஸ்தீனிய தரப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதேவேளை, காஸா பகுதியில் இடம்பெற்ற தனித்தனி தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
