நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (31) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டவிசேட சோதனையின் போது மாற்றியமைக்கப்பட்ட புகைக் குழாய்களைப் பொறுத்தி, அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18, 19, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் நிக்கவெரட்டிய, சித்திகுலிய, கொபேகனே மற்றும் சுத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களும் போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்திச் செலுத்தப்பட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நிக்கவரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
