அஹூங்கல – வெலிகமை பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக கருதப்படும் குற்றச்சாட்டில் 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டுடன் நேற்று (07) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பகுதியில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரின் வீட்டில் புதைத்து வைத்திருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெலிகமை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இதன் பின்னணியில் உள்ள பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் அஹூங்கல பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
