கட்டார் நாட்டின் வடக்கு கடற்பரப்புக்கு அருகில் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பல ஏவுகணை போன்ற பொருட்களால் கப்பல் தாக்கப்பட்டதாக கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச எண்ணெய் போக்குவரத்து தொடர்பில் புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
