நாகொடை – கெடகொட பகுதியில் அமைந்துள்ள ஜின் கங்கையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாகொடை பொலிஸாருக்கு நேற்று (08) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி உயரமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றும் பச்சை நிற வளையல் ஒன்றும் காணப்படுப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
