1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனப்படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், கறுப்பு ஜூலைச் சம்பவம் தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அக்காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் சொத்துகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை உரிய நீதிப் பொறிமுறை உருவாக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட விசாரணை ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
