Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜன் – தண்டனையைக் குறைக்க இன்று மேன்முறையீடு!

அக்டோபர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தண்டனையைக் குறைக்கக் கோரி, அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் இன்று மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்காக, மேலதிக மன்றாடியார் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் கடந்த 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். மேன்முறையீடு தொடர்பாக அவர்கள் அந்நாட்டு சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டின் மூலம் சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால், சவூதி அரேபிய மன்னரிடம் கருணை மனு சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அனோஜனை விடுவிக்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனக் கோரி, ராமஞ்ஞ மகா நிக்காய மற்றும் அமரபுர மகா நிக்காய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தொன்றின் காரணமாக, அனோஜனுக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், இருதரப்பு மேன்முறையீடுகளையும் பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

தொழில் நிமித்தம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்குச் சென்ற அனோஜனின் தண்டனை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவரது குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorizedஇந்தியாஉலகம்

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை!

ஜூன் 14, 2026
Uncategorized

நீட் தேர்வுக்கு எதிராக களமிறங்கும் திரை நட்சத்திரங்கள்:

ஜூலை 23, 2026
Uncategorized

பெற்றோரை இழந்த காஸாவின் 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துருக்கி நிறுவனம்!

மே 13, 2026
Uncategorized

‘மினி உசி’ (Mini Uzi) ரக தானியங்கி துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஜூன் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube