இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக நடத்தத் திட்டமிடப்பட்ட போராட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், பல இடங்களில் பொலிஸார் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினர்.
