இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் இணைந்து சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி–வடபழனி இடையிலான புதிய வழித்தடச் சேவையைத் தொடங்கி வைத்துள்ளனர்.
சுமார் 4,900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் இருவரும் மெட்ரோ ரயிலில் பயணித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
