இலங்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அமெரிக்காவின் 2026ஆம் ஆண்டுக்கான மனிதக் கடத்தல் தொடர்பான அறிக்கையில் இரண்டாம் நிலை (Tier 2) அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தொடர்பான அறிக்கை மதிப்பீடு செய்கிறது.
இரண்டாம் நிலை அந்தஸ்து என்பது மனிதக் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்சத் தரங்களை நாடு முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிக்கிறது
