இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை புதன்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் அவர் இலங்கைக்கு வந்த பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது இலங்கை தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் அவர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலதிக விபரங்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
