எயார் பஸ் விவாகரம் தொடர்பில் இன்று (13) கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
எயார்பஸ் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றத்தில் விசேட காரணங்கள் முன்வைக்கப்படாததைத் தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உடனடியாகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
