இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் சுமார் 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான BMW கார் ஒன்று முடக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் குறித்த வாகனத்துக்கு 14 நாட்கள் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்திருக்கக்கூடிய வருமானம் மற்றும் அதனைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத வருமானத்தின் மூலம் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக, இவ்வாறான சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
