சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அராம்கோ எண்ணெய் நிறுவன வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள நிர்வாகக் கட்டடத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதைவுகள் ரியாத் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்ததாகவும் 15 வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹூதி கிளர்ச்சிப் படைகளுக்கும் சவூதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.
