Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 GIT பரீட்சை அனுமதிப் பத்திரத் திருத்தத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் அனுமதிப் பத்திரங்களில் காணப்படும் தகவல்களைத் திருத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, முன்னர் 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி நள்ளிரவு வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், தற்போது ஒக்டோபர் 21ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரங்களில் பெயர், பரீட்சை மொழிமூலம், பாலினம் உள்ளிட்ட தகவல்களில் பிழைகள் காணப்படின், நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அவற்றைத் திருத்திக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 24ஆம் திகதி பரீட்சை

2027ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 12 மாணவர்களுக்காக முதன்முறையாக நடத்தப்படும் இந்த GIT பரீட்சை, 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1,520 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகத் தங்களது அனுமதிப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

எனவே, மாணவர்கள் தங்களது அனுமதிப் பத்திரங்களில் உள்ள தகவல்களைச் சரிபார்த்து, ஏதேனும் பிழைகள் காணப்பட்டால் புதிய காலக்கெடுவிற்குள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு:

  • அவசர அழைப்பு இலக்கம்: 1911
  • தொலைபேசி: 011 278 4208 / 011 278 4537
  • இணையத்தளம்: www.doenets.lk
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்குமாறு கோரிக்கை

ஆகஸ்ட் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சுற்றுலா மையமாக மாறும் Temple City

ஜூலை 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம்

ஜூன் 7, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய மகளிர் அணி டிசம்பரில் இலங்கைக்கு

செப்டம்பர் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube