கண்டி, அக்குறணை குருகொட சந்திப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்து தொடர்பில் கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகொட பொலிஸாரால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கிறீட் கலவை வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
