முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மேலும் ஒரு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
