Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடி நீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற இரத்தினபுரி சுற்றுலா விடுதிக்கு 5 இலட்சம் அபராதம்!

Water Bottle | High Price | Selling | Popular Hotel | SriLanka | QuickTamilNews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரத்தினபுரியிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றுக்கும், மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இரத்தினபுரியிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குடிநீர் போத்தல் பொதியில் அச்சிடப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் குறித்த விடுதிக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, குருவிட்ட, பரகடுவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்கள், உள்நாட்டு கீரி சம்பா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்த்து வாங்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக பணத்தைச் செலுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

முறிகண்டியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல் – சிக்கினார் முஜிபுர் ரஹ்மான்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube