லிந்துலை – மட்டுக்கலை தோட்டத்தில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற குளவிக் கொட்டுச் சம்பவத்தில் 15 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(24) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனையவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
