மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் கீழியன்குடியிருப்பு பகுதியில் இராணுவ ஜீப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில், இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
