Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை!

அக்டோபர் 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைத் தலைநகர் ஒட்டாவாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி ஆக்கிரமிப்பு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கனேடிய அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன், இந்த விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் காணிகளையும், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 2,117 ஏக்கர் காணிகளையும் உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. தையிட்டி காணிப் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, நல்லூரில் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்தும் கனேடிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாகக் கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் நிறைவில், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் கேப்பாப்பிலவு, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் பேச்சுவார்த்தை!

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் புதிய POS கட்டண முறைமை!

ஜூலை 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி,மட்டு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவின் கதிர்வீச்சு சிகிச்சைகள் ஸ்தம்பிப்பு!

ஜூன் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு அதிகரிப்பு

ஆகஸ்ட் 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube