Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

102 டிகிரி காய்ச்சல் காரணமாகவே ஹோட்டலுக்குச் சென்றேன் – கஸ்ஸப்ப தேரர்!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காய்ச்சல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்ததால் ஓய்வெடுக்கவும் மருத்துவ உதவி பெறவும் கொழும்பிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றதாக பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரர், கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்றமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பரவியதைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கான இடத்தையும் மருத்துவ உதவியையும் ஏற்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால், பல்வேறு அழைப்புகளைத் தான் நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பௌத்த மதத்தினரால் பிக்குகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்படுவது பாரம்பரியமான நடைமுறை எனவும், அவ்வாறான உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹோட்டலுக்கு வருகை தந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஹோட்டலுக்குச் சென்றமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு!

ஜூலை 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவன வளாகம் மீது தாக்குதல் – தீ விபத்து

அக்டோபர் 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மூதூர் நகரில் போதைப்பொருளுடன் 22 வயது இளைஞன் கைது!

ஜூன் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சிபானை இம்ரானை கைது செய்ய சர்வதேச வேட்டை!

ஆகஸ்ட் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube