தாய்லாந்தின் புகெட் தீவில் இரவு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கும் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
அங்குள்ள மழை அளவீட்டு நிலையம் ஒன்றில் கடந்த 24 மணித்தியாலங்களில் 142.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புகெட் தீவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
