நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையைக் கருத்திற்கொண்டு, 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஒக்டோபர் 27ஆம் திகதி மாலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்
கொழும்பு மாவட்டம்: சீதாவாக்கை, பாதுக்கை.
காலி மாவட்டம்: தவலம, நெலுவ, நியாகம, எல்பிட்டிய, கரந்தெனிய.
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல.
களுத்துறை மாவட்டம்: பேருவளை, ஹொரண, அகலவத்த, வலல்லாவிட்ட, மில்லனிய, பாலிந்தநுவர, இங்கிரிய, மதுராவலை, மத்துகம, புலத்சிங்கள, தொடங்கொட.
கண்டி மாவட்டம்: தொலுவ, ஹதரலியத்த, தும்பனே, கங்கவட்ட கோரளை, உடதும்பர, அகுரண, குண்டசாலை, மெததும்பர, பஸ்பாகே கோரளை, உடுநுவர, கங்க இஹல கோரளை, உடபலாத்த, யட்டிநுவர.
கேகாலை மாவட்டம்: கேகாலை, மாவனெல்லை, ருவன்வெல்ல, ரம்புக்கனை, கலிகமுவ, அரநாயக்க, தெஹியோவிட்ட, தெரணியகலை, யட்டியந்தோட்டை, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய.
குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, அலவ்வ, நாரம்மல, குருநாகல்.
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தர, கொட்டபொல.
நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ கோரளை, நோர்வூட்.
இரத்தினபுரி மாவட்டம்: கஹவத்த, வெலிகபொல, கொலொன்ன, இம்புல்பே, பலாங்கொடை, கிரியெல்ல, நிவித்திகல, கலவான, எஹலியகொடை, கொடகவெல, குருவிட்ட, எலபாத்த, அயகம, ஓபநாயக்க, பெல்மதுல்ல, இரத்தினபுரி.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய செங்குத்தான மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், மனிதர்களால் வெட்டப்பட்ட சரிவுகள் மற்றும் அவற்றை அண்மித்த வீதிகளில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஏற்கனவே மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள், அப்பகுதிகளின் நிலைமைகளைத் தொடர்ந்து அவதானித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்யும் பகுதிகளில் நிலத்தில் வெடிப்புகள், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உரிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
