உலகச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் நீடித்த நிலையில், திங்கட்கிழமை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்துள்ளன.
S&P 500 குறியீடு 0.7 சதவீதமும், டோவ் ஜோன்ஸ் குறியீடு 0.3 சதவீதமும், நாஸ்டாக் குறியீடு 0.8 சதவீதமும் உயர்ந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகளின் எதிர்கால வருமானம், கடன் செலவுகள் மற்றும் முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் அறிக்கைகள் குறித்து முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் உலகச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
