ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
