அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (27) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (28) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
