ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை அவரைத் தடுப்புக்காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நாளை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
