முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் காணி தொடர்பான நிதி மோசடி வழக்குடன் தொடர்புடையதாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
