வண்ணாத்திவில்லு, லக்டோவத்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சேமித்து வைத்திருந்த வழக்கில், 3ஆம் பிரதிவாதியான ‘கபூர் மாமா’ என அழைக்கப்படும் மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிரான 5 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று (28) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இதுவரை விளக்கமறியல் மற்றும் தடுப்புக் காவலில் கழித்த ஏழரை ஆண்டுகளைத் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இந்த வழக்கின் 6ஆம் பிரதிவாதியான ‘சஜித் மௌலவி’ தொடர்பான விசாரணை நாளை (29) காலை 8 மணிக்கு மீண்டும் நடைபெறவுள்ளது.
