Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028–2034 வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றம் முன்மொழிவு

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2028 முதல் 2034ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வரவுசெலவுத் திட்டத்தைத் திருத்தி அமைப்பதற்கான புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐரோப்பிய ஆணைக்குழு ஆரம்பத்தில் முன்வைத்த 2 டிரில்லியன் யூரோ வரவுசெலவுத் திட்டத்தை 1.6 டிரில்லியன் யூரோவாகக் குறைப்பது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் சில உறுப்பு நாடுகள் இந்தக் குறைப்பு போதுமானதல்ல என விமர்சித்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள புதிய வரவுசெலவுத் திட்டம், 2021–2027 காலப்பகுதிக்கான தற்போதைய திட்டத்தை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் முக்கிய கொள்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதில் இந்த வரவுசெலவுத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்ட தொகைகளின் அடிப்படையில் இந்தக் குறைப்பு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டம் தொடர்பான இறுதி முடிவு உறுப்பு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னரே எடுக்கப்படும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு  பண்ணையாளர்கள் போராட்டம் – தீர்வுகளின்றி மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்!

அக்டோபர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

மே 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் – புத்தசாசன அமைச்சு அறிவிப்பு!

அக்டோபர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஜூலை 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube