அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் ஜோர்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் C பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் கரும்புகை வெளியேறியதாகவும், சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீ ஏற்பட்ட பகுதிக்கு அருகிலிருந்த பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
