பாகிஸ்தானில் நடைபெறும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் இலங்கை அணி 55 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. பென் டக்கெட் 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் பெற்றனர்.
387 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 331 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 118 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 89 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியம் டவ்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேவேளை, மும்முனை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (31) இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
